அரசின் அலட்சியத்தால் மக்களுக்கு கடும் பாதிப்பு.. சென்னை வெள்ளம் குறித்து எடப்பாடி பழனிசாமி

வெள்ளி, 8 டிசம்பர் 2023 (19:00 IST)
சென்னையில் பல பகுதிகளில் மழைநீர் வடியவில்லை என்றும்,  மழைநீர் பாதிப்புகளுக்கு திமுக அரசு தான் காரணம் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.
 
சென்னை, சென்னை புறநகர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனைக்குப் பின அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
 
வானிலை ஆய்வு மைய எச்சரிக்கைக்கு பிறகும், அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை, அரசின் அலட்சியத்தால் மக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
 
மழைநீர் தேங்கிய பகுதிகளில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும், பல்வேறு பகுதிகளில் குளம் போல் மழைநீர் தேங்கியுள்ளது, 2015-ம் ஆண்டு புயல் பாதிப்பை அதிமுக அரசு திறமையாக சமாளித்தது, இதற்கு நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் தகுந்த பதில் அளிப்பார்கள்” என்று கூறினார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்