இந்நிலையில் நேற்று நள்ளிரவு திமுக தலைவர் கருணாநிதிக்கு சளி பிரச்சனை அதிகமாக அவர் மீண்டும் உடனடியாக அவசரமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பார்க்க திமுக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவிந்தனர்.
இதனையடுத்து காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். நுரையீரல் மற்றும் தொண்டை தொற்று காரணமாக, சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.