மேலும், வேட்பாளர்களும் கடன்வாங்கி தேர்தலுக்கு செலவிட்டனர். கட்சிக்கு கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு விஜயகாந்திடம் வேட்பாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக, கட்சி மேலிடத்தில் இருந்து எந்த பதிலும் வராத நிலையில், சென்னை தே.மு.தி.க.,அலுவலகத்தில், வேட்பாளர்களின் மனைவிகள் ஒன்று சேர்ந்து, விஜயகாந்த் காலில் விழுந்து, கதறி அழுது, தங்கள் பணத்தை தருமாறு கேட்டனர்.