திவாகரனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு

வெள்ளி, 25 ஜூன் 2021 (09:00 IST)
சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில் சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த திவதாகரனுக்கு சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்