மீண்டும் வெடித்தது வடகலை - தென்கலை மோதல்.. காஞ்சிபுரம் கோவிலில் பரபரப்பு..!

Mahendran

திங்கள், 12 மே 2025 (10:10 IST)
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெறும் வைகாசி பிரம்மோற்சவத்தின் போது இந்த ஆண்டு மீண்டும் வடகலை - தென்கலை பிரச்சினை எழுந்துள்ளது. 
 
வைகாசி பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளில், ஹம்ஸ வாகனத்தில் பறந்து வரதராஜ பெருமாள் அருள் புரிந்தார். அந்த நேரத்தில், மண்டகபடி கண்டருளியபோது வடகலை மற்றும் தென்கலை பிரிவினருக்கு இடையே மந்திர புஷ்பம் பாடுவது குறித்து வாக்குவாதம் மற்றும் மோதல் ஏற்பட்டது. 
 
இதனால், இரு பிரிவினருக்கும் இடையில்  வாக்குவாதம் எழுந்தது. இதன் விளைவாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் அவதியடைந்தனர்.
 
கடந்த வருடமும், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தின் மண்டகபடி நிகழ்ச்சியில் பிரபந்தம் பாடும் போது, வடகலை மற்றும் தென்கலை பிரிவினர்களுக்கிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. 
 
இந்த இரு சம்பவங்களும், கோவிலின் பிரமோற்சவங்களில் ஒற்றுமை மற்றும் அமைதி நிலைபெறுவதற்கான தேவையை எடுத்து கூறுகின்றன.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்