பணத்தை கொட்டுவோம் இல்லை உயிரை எடுப்போம்: அதிரடியாய் களமிறங்கும் தினகரன்!!

சனி, 18 மார்ச் 2017 (08:54 IST)
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடா செய்து வெற்றிபெறுவதற்காக டிடிவி தினகரன் பல திட்டங்களை தீட்டி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 
 
வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். தேர்தலில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என கூறிவருகிறார்.
 
வெற்றிக்கு தினகரன் ஆண்ட் கோ பெரிய திட்டத்தை தீட்டி உள்ளது. சசிகலா கூவத்தூரில் எப்படி எம்எல்ஏ-க்களை அடைத்து வைத்து, பணத்தை தண்ணி போல செலவழித்து அவர்களது ஆட்சிக்கு ஆதரவு திரட்டப்பட்டதோ, அதே போல் ஆர்கே நகர் வாக்காளர்களை பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுத்து கவர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்த திட்டத்திற்காக, 50 வாக்காளர்களுக்கு 10 கண்காணிப்பாளர்கள் என்ற அளவில் மிகப்பெரிய ப்ளான் போடப்பட்டுள்ளதாம். இது  சரியாக நிறைவேற அதிமுக நிர்வாகிகள் ஒத்துழைக்க வேண்டும். இல்லையெனில் அவர்களது உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளதாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்