சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல தடை

செவ்வாய், 2 நவம்பர் 2021 (13:30 IST)
தொடர் மழை காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

 
ஆம் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் தொடர் மழை பெய்வதால் ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
அதாவது ஜப்பசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசைக்கு 2 ஆம் தேதி (இன்று) முதல் வரும் 5 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிப்பதாக கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்