அத்திவரதர் கோவிலில் பக்தருக்கு வலிப்பு : பெண்காவலரின் மனிதநேயம் !

சனி, 13 ஜூலை 2019 (15:01 IST)
காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க நாள்தோறும் பல்லாயிரக்கான மக்கள் தரிசிக்க வந்துகொண்டே இருக்கின்றனர். இந்நிலையில் இன்று அத்திவரதரை தரிசிக்க வந்த ஒரு பக்தருக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த பெண் காவலர் அவருக்கு உதவி செய்தார். இதனால் அங்கிருந்த மக்கள் அவருக்குப் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் நாற்பது வருடங்களுக்கு ஒருமுறை தொடர்ந்து 48 நாட்கள் பக்தர்களுக்காகக் காட்சி தருகிறார்.அதனால் அத்திவரதரின் தரிசனத்துக்காக தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அத்திவரதர் கோவிலுக்கு வருகை புரிந்து வருகிறார்கள்.
 
இந்நிலையில் இன்று பக்தர் ஒருவர் கோவிக்கு வந்துள்ளார். ஆனால் திடீரென்று அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டது. அப்போது அங்கு பணியில் இருந்த பெண் காவலர் தீபா, அந்த பக்தரின் முகத்தில் தண்ணீர் தெளித்து, அவரது முகத்தை துடைத்துவிட்டு, குடிக்க தண்ணீர் கொடுத்து உதவிசெய்தார். பின்னர் மருத்துவ ஊர்த்தி வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்த மக்கள் பெண் காவலர் தீபாவை மனதாரப் பாராட்டினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்