11 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்: அடுத்த 5 நாட்களுக்கு மழை!

திங்கள், 8 நவம்பர் 2021 (10:25 IST)
தென் கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல். 

 
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல இடங்களில் மழை பெய்து வந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆறு ஆண்டுகளுக்கு பின் தற்போது தான் ஒரே நாளில் 20 சென்டி மீட்டருக்கு அதிகமான மழை பெய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் தென் கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிரமடைந்து 11 ஆம் தேதி வட தமிழகம் அருகே வரும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்