சென்னையை மீண்டும் மிரட்டும் "டெங்கு" - அதிர்ச்சி ரிப்போர்ட்

சனி, 5 செப்டம்பர் 2015 (15:43 IST)
சென்னையில் டெங்கு காய்ச்சல் மீண்டும் பரவி உள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் மீண்டும் டெங்கு காய்ச்சல் தலை தூக்கியுள்ளதாக தகவல் பரவியுள்ளது. நகரின் சில பகுதிகளில் டெங்கு பாதித்தவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முக்கியமாக வடசென்னை பகுதிகளில் இந்நோய் மிகவும் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.

'ஏடீஸ்" என்ற கொசுதான் இந்த டெங்கு நோயை பரப்புகிறது. டெங்குவின் அறிகுறிகளான காய்ச்சல்,தலைவலி, உடல்வலி, கண் எரிச்சல் ஆகியவை நமது உடலில் ஏற்பட்டவுடன் மருத்துவரை சந்திப்பது மிகவும் நல்லது. இல்லையெனில் உயிரை இழக்க நேரிடலாம். மூன்று நாட்களுக்கு மேலாகியும், காய்ச்சல் குறையாவிடில் உடனே மருத்துவரிடம் ஆலோசித்து ரத்தப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. அதுவும் குழந்தைகள் விஷயத்தில் நாம் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.

சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிடில், டெங்கு காய்ச்சல் நமது உடலில் சோர்வை ஏற்படுத்தி ரத்த அணுக்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்துக் கொண்டே வரும். அது ஆபத்தில் முடியும். எனவே மேற்கண்ட அறிகுறிகள் பெரியவர்களுக்கோ அல்லது குழந்தைகளுக்கோ இருந்தால் உடனே மருத்துவரை சந்திப்பது நல்லது.

வெப்துனியாவைப் படிக்கவும்