டிடிவி தினகரனின் ரகசிய தோழியிடம் விசாரணை: பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும் என தகவல்
வியாழன், 27 ஏப்ரல் 2017 (22:19 IST)
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரனை கைது செய்து விசாரணை செய்து வரும் டெல்லி போலீஸ் அடுத்தகட்டமாக தினகரனின் மனைவியுடனும், அவருடைய ரகசிய தோழி ஒருவருடனும் விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
இந்த விசாரணைக்கு பின்னர் டிடிவி தினகரனின் ரகசிய தோழியிடம் இருந்து பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவர வாய்ப்பு உள்ளதாகவும், அந்த உண்மைகள் தமிழகத்தின் பல விவிஐபிக்களை தூங்கவிடாமல் செய்யும் அளவுக்கு இருக்கும் என்றும் அதிமுகவுக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
தினகரனின் ரகசிய தோழியின் வீடு சென்னை திருவல்லிக்கேணியில் இருப்பதாகவும், டெல்லி புரோக்கர் சுகேஷுக்கு லஞ்சப்பணம் கொடுத்ததில் அவருக்கு நெருங்கியதொடர்பு இருக்கலாம் எனவும் போலீஸ் சந்தேகிக்கின்றது.