ஆனால், தீபாவின் சகோதரரான தீபக், ஜெ.வின் இறுதி சடங்கு செய்ய சசிகலாவால் அனுமதிக்கப்பட்டார். மேலும், அவர் சசிகலாவின் கஸ்டடியில் இருப்பதாக செய்திகளும் வெளியாகியது.
இந்நிலையில், இன்று காலை ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தீபக் “எனது அத்தை ஜெயலலிதா மறைவில் எந்த மர்மமும் இல்லை. ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது அப்பலோ மருத்துவமனையில் நான் 70 நாட்கள் இருந்தேன். ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக சில மருத்துவ ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளேன். எல்லாம் முறைப்படியே நடந்தன. எனவே அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்படுவதில் உண்மையில்லை” என அவர் கூறியுள்ளார்.