கரும்புத் தோட்டத்தில் மாமியாரை அடித்து கொன்ற மருமகள்

செவ்வாய், 12 ஜூலை 2016 (11:24 IST)
சிவகங்கை மாவட்டத்தில் திருப்பாச்சேத்தியில் கரும்புத் தோட்டத்திற்குள் வைத்து மாமியாரை மருமகளே அடித்து கொன்ற சம்பவம் நடந்துள்ளது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
திருப்பாச்சேத்தியை சேர்ந்த பாக்கியம் தனது சொத்துக்களை தனது இரண்டு மகன்கள் மற்றும் மகளுக்கு பிரித்து கொடுத்துவிட்டு தனது பங்கு நிலத்தில், கரும்பு பயிரிட்டு வந்துள்ளார்.
 
பாக்கியத்துக்கும் அவரது மருமகள் ரேணுவுக்கும் சொத்து விவகாரத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.  இந்த தகராறு முற்றி தனது உறவினர்களுடன் சேர்ந்து ரேணு தனது மாமியாரை கரும்பு தோட்டத்தில் வைத்து அடித்து கொலை செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
 
அடித்து கொல்லப்பட்ட பாக்கியத்தின் மகள் திருப்பாச்சேத்தி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சொத்து தகராறில் தான் நடந்தது என கூறப்படுகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்