அங்கு காய்கறி சந்தை அமைக்கப்பட்டதில் இருந்து காய்கறி வியாபாரம் மந்தமாகவே உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் அங்கு சேமிப்புக் கிடங்கு வசதியும் இல்லாததால் தினமும் 2 லட்சம் கிலோ காய்கறிகள் வீணாவதாக சொல்லப்படுகிறது. திருமண விழாக்கள் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகள் எதுவும் ஊரடங்கு காரணமாக தற்போது நடைபெறாததால் காய்கறிகள் தேவை குறைந்துள்ளது. அதனால் வியாபாரமும் மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.