சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்தியாவில் கொரோனாவைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது வரும் நிலையில், வரும் 30 ஆம் தேதி வரை சில மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திவருகின்றன. தமிழகத்தில் பிரதமரின் உத்தரவைக் கேட்டுச் செயல்படுத்தப்படும் என தலைமைச்செயலர் சண்முகம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் வரும் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு எனவும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2ம் முறையாக ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் பழனிசாமி அறித்துள்ளதாவது :
தமிழகத்தில் வரும் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மே மாத பொருட்கள் இலவசமாக வழங்லப்படும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2ம் முறையாக ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.