ஜெயலலிதா உடல்நிலை செய்தியை அறிந்த அதிமுக பிரமுகர் மரணம்
திங்கள், 5 டிசம்பர் 2016 (12:43 IST)
ஜெயலலிதா உடல்நிலை செய்தியை தொலைக்காட்சியில் பார்த்த கடலூர் அதிமுக பிரமுகர் நீலகண்டன் நெஞ்சுவலியால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவுக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டது. இச்செய்தி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் சன்னியாசிபேட்டையைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் நீலக்கண்டன்(40) இச்செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரது குடும்பத்தினர் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
நீலக்கண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் அதிமுக கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.