சிதம்பரம் நடராஜர் கோவிலை அபகரிக்க அரசு திட்டம்: எச்.ராஜா குற்றச்சாட்டு..!

Siva

வியாழன், 10 அக்டோபர் 2024 (11:23 IST)
சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு அபகரிக்க திட்டமிட்டதாக பாஜக பிரமுகர் எச் ராஜா தெரிவித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி சிதம்பரம் நடராஜர் கோவிலை நிர்வாகம் செய்ய தீட்சதர்களுக்கு உரிமை உண்டு என்ற நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவிலை அபகரிக்க தமிழக அரசு திட்டமிட்டதாக எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலை பொருத்தவரை, அறநிலையத்துறை தலையிடக்கூடாது என்றும், அவர்களுக்கு அந்த அதிகாரம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. ஆனாலும், சிதம்பரம் கோவிலின் சொத்துக்கள் தனி தாசில்தாரால் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த நிலங்கள் பொது தீட்சிதர்களிடம் இல்லை.
 
2006 ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் நீதிபதி, இந்த கோவில் நிலங்கள் மூவாயிரம் ஏக்கர்களில் இருந்து கோவிலுக்கு வரும் நிதி சொற்பமாக உள்ளது என்று தனது தீர்ப்பில் கூறியுள்ளார். அரசு கோவில் நிலங்களிலிருந்து வருடத்திற்கு 90 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறது.

தற்போது திடீரென அறநிலைத்துறை தீட்சிதர்கள் 2000 ஏக்கரை விற்று விட்டதாக கூறுவது மோசடி ஆகும். சிதம்பரம் கோயிலை அரசு அபகரிக்க சதி திட்டம் தீட்டுகிறது என்று குற்றம் சாட்டுகிறோம். நடராஜர் கோவிலில் தரிசன கட்டணம் கிடையாது, அபிஷேக கட்டணம் கிடையாது, உண்டியல் கிடையாது. அரசு தனி தாசில்தாரிடம் உள்ள நிலங்களை எப்படி தீட்சிதர்கள் விற்க முடியும்? தமிழகத்திலேயே உண்டியல் இல்லாத ஒரே கோயில் சிதம்பரம் கோயில் தான் என்றும் அவர் கூறினார்.


Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்