அன்பு சென்னைவாசிகளே!! மாநகராட்சி சொல்வத கொஞ்சம் கேளுங்க பா...

சனி, 13 ஜூன் 2020 (09:17 IST)
கொரோனா தொற்று அறிகுறி இருப்பவர்கள் வீட்டில் இருந்தால், என்னென்ன பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி பட்டியலிட்டுள்ளது. 
 
கொரோனா நுண்கிருமி தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அல்லது அறிகுறி இருப்பவர்களுக்கான வீட்டில், அவர்களை பராமரிப்பவர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு முறைகள் பின்வருமாறு... 
 
1. கொரோனா தொற்று உள்ளவர் அல்லது அறிகுறி உள்ளவர் நீர் ஆகாரம் மற்றும் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். 
2. கொரோனா தொற்று உள்ளவர் அல்லது அறிகுறி உள்ளவரோடு இருக்கும் போது முகக்கவசம் அணிவது கட்டாயம். 
3. அடிக்கடி சானிடைசர் அல்லது சோப்பு போட்டு கைகழுவ வேண்டும். முக்கியமாக கழிப்பறைகளை பயன்படுத்தும் போது. 
4. கொரோனா தொற்று உள்ளவர் அல்லது அறிகுறி உள்ளவருக்கென தனி பாத்திரம், துணி, படுக்கை ஆகியவற்றை வழங்க வேண்டும். 
5. வீட்டை நன்கு துடைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முக்கியமாக கொரோனா தொற்று உள்ளவர் அல்லது அறிகுறி உள்ளவர் அதிகம் புழங்கும் இடத்தில்.
6. கொரோனா தொற்று உள்ளவர் அல்லது அறிகுறி உள்ளவருக்கு முச்சு திணறல் ஏற்பட்டால் தாமதிக்காமல் மருத்துவ உதவியை நாட வேண்டும். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்