4 லட்சம் பேருக்கு கோவாக்சின் 2 ஆம் டோஸ் பற்றாக்குறை

செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (13:31 IST)
மத்திய அரசு சரியான நேரத்தில் மருந்து வழங்காததால் கடந்த 6 வாரத்தில் சுமார் 4 லட்சம் பேருக்கு கோவாக்சின் 2 ஆம் தவணை கிடைக்காத சூழல் உருவாகி உள்ளது.

 
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்றால் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று தமிழக அரசின் சுகாதாரத்துறை அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.  
 
அதே நேரத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றாக்குறை இருந்ததன் காரணமாக தடுப்பூசி செலுத்த முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், மத்திய அரசு சரியான நேரத்தில் மருந்து வழங்காததால் கடந்த 6 வாரத்தில் சுமார் 4 லட்சம் பேருக்கு கோவாக்சின் 2 ஆம் தவணை கிடைக்காத சூழல் உருவாகி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்