சென்னை போன்ற பெருநகரங்கள் முதல் சிறுநகரங்கள் வரை குடிதண்ணீருக்காக 20 லிட்டர் வாட்டர் கேன்கள் உபயோகப்படுத்தப் படுகின்றன. இந்த கேன்கள் பெரும்பாலும் ஆண்கள் கையாளும் விதமாக இருப்பதாகவும் பெண்களால் தூக்கி சுமக்க முடியவில்லை என்றும் எனவே அவற்றின் வடிவங்களை பெண்கள் எளிதாக கையாளும் விதமாக மாற்றியமைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தீபா ஸ்ரீ என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது ‘நீங்கள் நினைக்கும் உத்தரவுகளைப் பெற நீதிமன்றம் ஒன்றும் வணிக வளாகம் அல்ல. மேலும் மனுதாரர்களின் கோரிக்கைகளை அரசிடம் கொண்டு சேர்க்க நீதிமன்றம் ஒன்றும் தபால் நிலையம் அல்ல’ எனவும் தெரிவித்து அந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.