தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்த பாஜக அனுமதி கோரிய நிலையில் தமிழக அரசு தடை விதித்திருந்தது. ஆனால் கடந்த நவம்பர் 6, 7 மற்றும் 9ம் தேதிகளில் திருத்தணி, திருவொற்றியூர் மற்றும் செங்கல்பட்டில் வேல் யாத்திரை நடத்தியதற்காக எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்று பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி அளிப்பது குறித்த விசாரணையில் டிஜிபி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் “பாஜகவின் வேல் யாத்திரை கோவில் யாத்திரை அல்ல; அது அரசியல் யாத்திரை. 10 வாகனங்களில் 30 பேர் மட்டுமே செல்வதாக அவர்கள் எழுதி கொடுத்தது காகிதத்தில் மட்டுமே உள்ளது. பாஜக தலைவர் எல்.முருகனின் வாகனம் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் சிரமப்பட்டனர்” என்று கூறப்பட்டுள்ளது.