’மூடு டாஸ்மாக்கை..’ பாடகர் கோவனை கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை

செவ்வாய், 3 நவம்பர் 2015 (19:37 IST)
மூடு டாஸ்மாக்கை மூடு நீ…. பாடலை பாடிய மக்கள் கலை இலக்கிய கழக தோழர் கோவனை கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
 

 
தமிழக அரசின் மதுபான கடைகளை இழுத்து மூடும் போராட்டத்தின் ஒரு பகுதியாக மக்கள் கலை இலக்கிய கழகத்தின் அமைப்பான 'மக்கள் அதிகாரம்' அமைப்பினர்,
 
”மூடு டாஸ்மாக்கை மூடு நீ….
மூடு டஸ்மாக்கை மூடு
நீ ஓட்டுப் போட்டு மூடுவான்னு
காத்திருப்பது கேடு..”
 
- என்ற பாடலை சமுக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.
 
இந்நிலையில், திருச்சியில் வெள்ளிக்கிழமை [30.10.2015] அதிகாலை 2.30 மணிக்கு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புரட்சிப்பாடகர் தோழர் கோவன் தோழர் கோவன் வீட்டிற்குச் சென்ற சென்னை குற்றப் பிரிவு காவல் துறையினர் அவரைக் கைது செய்து செய்தனர். 
 
மேலும் அவர் மீது, 124 ஏ பிரிவின் கீழ் தேசத்துரோக நடவடிக்கையில் ஈடுபட்டதாக, வழக்கு பதிவு செய்தனர்.
 
தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் சட்டத்தில் கோவனை கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நவம்பர் 17-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்