தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கடந்த 16, 17 ஆகிய தேதிகளில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும், RT PCR பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. இந்நிலையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து தலைமைச் செயலாளர் முனைவர் ராஜீவ் ரஞ்சன் மருத்துவ நிபுணர் குழுவினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கூட்டத்தின் முடிவில் பல்வேறு முக்கிய அறுவிப்புகள் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.