60 மாணவர்களுக்கு கொரொனா உறுதி...

புதன், 29 செப்டம்பர் 2021 (16:34 IST)
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு கொரோனா பரவியது. இந்தியாவிலும் தொற்றுப் பரவ அதிகரித்ததை அடுத்து, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.  இதனால் பள்ளிகள் மூடப்பட்டன.

இந்நிலையில் இந்த ஆண்டு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால், கொரொனா இரண்டாம் அலை தீவிரம் அடையவே  மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன. சமீபத்தில் மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு கர்நாடக மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டது. தற்போது ஆனோக்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விடுதியில் தங்கியிருந்த 60 மாணவர்களுக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனால் பள்ளி வளாகம் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது, மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்