திருவாரூரில் பொது இடங்களில் மது அருந்த தடை! – மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை!

புதன், 29 செப்டம்பர் 2021 (14:58 IST)
திருவாரூர் மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்தினால் நடவடிக்கை என மாவட்ட எஸ்.பி எச்சரித்துள்ளார்.

தமிழகம் முழுவதுமே மதுபானக்கடைகள் பல செயல்பட்டு வந்தாலும் மதுப்பிரியர்கள் மதுபானங்களை வாங்கி கடைகளின் வெளியே, பொது இடங்களிலேயே குடிப்பதும், பின்னர் பொது போக்குவரத்து பகுதிகளில் தகராறு செய்து இடையூறு செய்வதும் அடிக்கடி நடந்து வருகிறது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் பொது இடங்களில் யாரேனும் மது அருந்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி விஜயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் பொது இடத்தில் மது அருந்துவது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க 9498181220 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்