கோ ஆப்டெக்ஸ்-ல் நிறுவனத்தில், தங்க மழை திட்டம் மூலம் தேர்வு செய்யப்பட்ட, அதிர்ஷ்டசாலிக்கு அமைச்சர் கோகுல இந்திரா தங்கம் வழங்கினார்.
கோ ஆப்டெக்ஸ்சின் விற்பனையை பெருக்கும் வண்ணம் தங்க மழைத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தில் நெல்லை மண்டலத்தில் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு முதல் பரிசாக 4 கிராம் தங்கமும், இரண்டாவது பரிசாக 2 கிராம் தங்கமும் வழங்கப்பட்டது.