பல்லடம் தாலூக்கா நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கத்தின், 75 வது சுதந்திர தின பவள விழா சிறப்பு கூட்டம் பல்லடம் அதன் நிர்வாக அலுவலகத்தில் ஆகஸ்ட் 15 ல் நடைபெற்றது. கூட்டத்திற்கு இயக்கத் தலைவர் மணிக்குமார் தலைமை வகித்து தேசியக்கொடி ஏற்றினார் செயலாளர் தங்கராஜ் வரவேற்றார் முத்துச்சாமி முன்னிலை வகித்தார், நிகழ்ச்சியில் இந்திய சுதந்திர போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் பெற்ற சுதந்திரத்தை பேணிக்காக்கவும் அதை சரியாக பயன்படுத்தவும் இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி நுகர்வோர் ஒவ்வொருவரும் தங்களது சமுதாய கடமைகளை சரியாய் செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்த உறுதிமொழி எடுக்கப்பட்டது. சங்கத்தில் புதிதாக சேர்ந்த உறுப்பினர்களுக்கு ID கார்டுகள் வழங்கப்பட்டது தொடர்ந்து மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர், கலப்படம் இல்லா உணவப்பொருள், நஞ்சில்லா உணவு, சுகாதாரமான சுற்றுச்சூழல், தெருவிளக்கு, சாலை வசதி குறைவில்லாமல் கிடைக்கவும், மறுக்கப்பட்ட, மக்களின் மனு நீதி உரிமைகளை பெற்றுத்தர குரல் கொடுக்க, வழக்கு தொடுக்க விரைவான முன்னெடுப்புகளை மேற்கொள்வது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மேலும் திருப்பூரில் சுதந்திர தின பவள விழா மெல்லோட்டம் சிறப்பாக நடத்திய தினமலர் நாளிதழ் சார்ந்தவர்களுக்கும் அதில் பெருமையுடன் கலந்து கொண்டவர்களுக்கும் பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மகளிர் அணி சுஜிதா சுப்புலட்சுமி, கல்யாணி உறுப்பினர் காமராஜ் அந்தோனிசாமி, ஈஸ்வரன், மனோகர், செல்வகுமார், ஜீவா, கார்த்தி, சதீஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர் கூட்ட முடிவில் நாகராஜன் நன்றி கூறினார்