திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்கா நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் 'நுகர்வோர் விழிப்புணர்வு கலந்துரையாடல் மற்றும் பொது மக்கள் குறை கேட்பு கூட்டம் 12. 02.2023.ஞாயிறு அன்று பல்லடம் நிர்வாக அலுவலகத்தில் நடந்தது .கூட்டத்திற்கு நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கத் தலைவர் மணிக்குமார் தலைமை வகித்தார் செயலாளர் தங்கராஜ் வரவேற்றார் துணைச்செயலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களிடம் விருது பெற்ற ஈரோடு சமூக ஆர்வலர் வள்ளி நாயகம் மற்றும் தமிழ் நாடு தகவல் பெறும் உரிமை மக்கள் இயக்கம் மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புரை ஆற்றினர் .
கூட்டத்தில் கூறப்பட்ட புகார்கள்படி *எரிவாயு நுகர்வோர்கள் சிலிண்டர் பில் தொகைக்கு மேல் ரூ. 50,100 என கேஸ் சப்ளையருக்கு இனாம் கொடுக்க வேண்டாம் மீறி கட்டாயப்படுத்தினால் நுகர்வோர் பாதுகப்பு துறைக்கு அல்லது நுகர்வோர் அமைப்புக்கு உடனே புகார் அளிக்க வேண்டும்.
உணவு பொருட்களை பாக்கெட்டுகளில் வாங்குவோர் அதன் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, விலையை பார்த்து வங்க வேண்டும். வாங்கும் பொருளுக்கு உரிய ரசீது கேட்டு பெற வேண்டும் . ' நுகர்வோருக்கு ' பில்'லே ஆயுதம்.
நுகர்வோர் தொழிலாளர்களின் உரிமைகள் மெல்ல மெல்ல பறி போய் கொண்டிருப்பதால் அனைவரும் ஆங்காங்கே உள்ள பொது நல அமைப்பு, சங்கங்கள், இயக்கங்களில் இணைந்து உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும்.
மேலும் கூட்டத்தில், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் சுனிதா , பழனிச்சாமி. பிரகாஷ், செல்வகுமார், கண்ணன், செல்வராஜ், காமராஜர், அற்புதராஜ்வீரன் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் சுப்புலட்சுமி நன்றி கூறினார்.