காங்கிரஸ் கட்சியின் 21 வேட்பாளர்கள் அறிவிப்பு!

ஞாயிறு, 14 மார்ச் 2021 (09:18 IST)
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அந்த 25 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டு இருந்தது.
 
காங்கிரஸ் கட்சியில் உள்ள கோஷ்டி பூசல் தலைவர்கள் தங்கள் ஆதரவாளர்களுக்கு சீட் வேண்டும் என்று கேட்டதும் வெளிப்படையாகவே ஒரு சிலர் காங்கிரஸ் கட்சியின் தலைமை மீது குற்றம் சாட்டியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
குறிப்பாக காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது டுவிட்டர் பக்கத்தில் காசு கொடுப்பவர்களுக்கு தான் சீட் என்ற நிலை இருப்பது வருந்தத்தக்கது என குறிப்பிட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது 
 
இந்த நிலையில் சற்று முன் காங்கிரஸ் கட்சியின் 21 வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பின்படி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இதோ:

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்