தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ விஜயதரணி பேசுகையில், தமிழக அரசியல் வரலாற்றில் இரண்டாவது முறையாக தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட பெண் முதல்வரான ஜெயலலிதாவுக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், தமிழகத்தில், 500 மதுக்கடைகளை மூடவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதில், எனது தொகுதியில் ஒரு மதுக்கடையையும் மூடப்பட்டுள்ளது. இதற்காகவும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.