காணாமல் போன கைபேசிகளை மீட்டு ஒப்படைக்கும் நிகழ்வில்போலீசாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுகோள்-கமிஷனர் ந.காமினி!

J.Durai

வியாழன், 13 ஜூன் 2024 (14:43 IST)
திருச்சி மாநகரஎல்லைக்குட்பட்ட பகுதியில் காணாமல் போன  சுமார் ரூ.20 இலட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த 96ஆன்டிராய்டு செல்போன்கள் அதன்உரிமையாளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கேகே நகர் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது.
 
இதில் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி கலந்து கொண்டு பறிமுதல் செய்யப்பட்ட 137 கைப்பேசிகளில் 96 கைபேசிகளை உரிமையாளர்களிடம்ஒப்படைக்கப்பட்டது.
 
பின்னர் அவர் பேசும்போது:-
 
திருச்சி மாநகரில் கடந்த நான்கு மாதங்களில் பொதுமக்கள் கொடுத்த புகார்களின் பெயரில் திருடு போன மற்றும் தொலைந்து போன 137 கைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளர்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 
 
திருச்சி மாநகரில் நடந்த 22 வழிப்பறி வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்து பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
 
வீட்டில் பூட்டை உடைத்து திருடிய 19 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் இதுவரை திருச்சி மாநகரில் 55 பேர் குண்டத்தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்
 
இச்சிறப்பு முகாமில், காவல் துணை ஆணையர்கள் செல்வகுமார் விவேகானந்தா சுக்லா உதவி ஆணையர்கள் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
 
9 சோதனைச் சாவடிகளில் நவீன கேமராக்கள் பொருத்தும் பணி
திருச்சி மாநகர காவல் துறை எல்லைக்குள் உட்பட்ட 9 சோதனை சாவடிகளில் வாகனங்களின் பதிவு எண்களை படம்பிடித்து 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதாகவும் காவல் ஆணையர் என். காமினி தெரிவித்தார். 
 
மேலும் தொடர்ந்து பேசும்போது :-
 
மாநகரத்தின் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கேமராக்கள் பொருத்த வேண்டும். என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தற்போதைய சூழலில் மாநகரத்தில் 860 கேமராக்கள்
பயன்பாட்டில் உள்ளன. 
 
இந்த கேமராக்கள் அனைத்தும் காவல்துறை கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன. மாநகர எல்லைகளில் உள்ள 9 சோதனைச் சாவடிகளில் தானியங்கி வாகன பதிவு எண்களை கண்டறியும் நவீன கேமரா (ஏஎன்பிஆர்) பொருத்தி அதன் வாயிலாக இரவு, பகலாக அவ்வழியே கடந்து செல்லும் வாகனங்களை கண்காணிக்கிறோம் சந்தேகத்துக்குரிய நபர்களிடம் விசாரித்து பல்வேறு குற்ற சம்பவங்களையும் தடுத்துள்ளோம். மாநகரப் பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருட்டுக்கள் தொடர்பாக இளம் குற்றவாளிகளை கண்டறிந்து வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகிறோம்.
 
வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் அனைத்து முக்கிய இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்