கல்லூரிக்கு சென்று வந்த ராதாவும், ஹரிஹரசுதனும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் அடிக்கடி வெளியே சுற்றி வந்துள்ளனர். அப்போது சுதன் ஆசை வார்த்தைகளை கூறி ராதாவுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
பின்னர் படிப்படியாக ராதாவை புறக்கணித்து வந்த சுதன், ராதாவை திருமணம் செய்யாமல் நான்கு மாதத்திற்கு முன்னர் வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதனை கேள்விப்பட்ட ராதாவுக்கு மேலும் ஓர் அதிர்ச்சி காத்திருந்தது, ராதா கர்ப்பமாக இருப்பது சில நாட்களுக்கு முன்னர் தான் தெரியவந்தது.