நெல்லையில் கல்லூரி மாணவி வெட்டி கொலை

செவ்வாய், 28 ஜூன் 2016 (08:00 IST)
திருநெல்வேலி அருகே திருமணமானவர் உடன் காதல் வசப்பட்ட கல்லூரி மாணவியை, அவரது அண்ணன் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.


 

 
திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு பகுதியைச் சேர்ந்த மாலா என்பவர் கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரிக்கு செல்லும் போது திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் உள்ள பழக்கடையில் வேலை பார்த்து வந்த சார்லஸ் என்பவரும் மாலாவுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.
 
இதை அறிந்த மாலாவின் பெற்றோர் மாலாவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். திருமணம் ஏற்பாடு செய்வதை அறிந்த மாலா தன் பாட்டி வீட்டுக்கு செல்வதாக கூறி தலைமறைவு ஆகியுள்ளார்.
 
இதுகுறித்து மாலாவின் பெற்றோர் காவல் துறையில் புகார் செய்து, காவல் துறையினர் விசாரணை நடத்தி மாலாவை சார்லஸிடம் இருந்து மீட்டு அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 
 
இதைத்தொடர்ந்து மாலாவுக்கு திருமணம் ஏற்பாடு நடந்து வந்துள்ளது. மாலாவும் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில் சென்னையில் தீயணைப்பு படையில் பணிபுரியும் மாலாவின் அண்ணன் கிருஷ்ணராஜா ஊருக்கு வந்துள்ளார்.
 
தங்கையிடம் திருமணத்துக்கு சம்மதிக்குமாறு கூறிய கிருஷ்ணராஜா, தங்கை மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்து அரிவால் வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளார். காயமடைந்த மாலாவை பெற்றோர்கள் மருத்துவமனையில் சேர்த்தும், சிகிச்சை பலனின்றி மாலா உயிரிழந்தார்.
 
இதுதொடர்பாக மூன்றடைப்பு காவல் துறையினர் கிருஷ்ணராஜா மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்      

வெப்துனியாவைப் படிக்கவும்