மகளிருக்கு மாதம் ரூ.1000 எப்போது? முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு..!

சனி, 25 பிப்ரவரி 2023 (11:42 IST)
மகளிருக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கைகள் தெரிவித்திருந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் மகளிருக்கு மாதம் ரூ.1000 எப்போது என்பது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் போது திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் பல்வேறு அம்சங்களை தெரிவித்திருந்தது. அவற்றில் ஒன்று குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும் என்பது ஒன்றாகும். கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக தனது பல தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய போதிலும் குடும்ப தலைவருக்கு ஆயிரம் ரூபாய் என்ற வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் இன்று ஈரோட்டில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மகளிர்க்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் எப்போது வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
 
வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் ரூ.1000 குறித்த அறிவிப்பு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். நிதி நிலையை அதிமுக ஒழுங்காக வைத்து விட்டு சென்றிருந்தால் ஆட்சிக்கு வந்ததுமே மகளிர்க்கு உரிமை தொகையை திட்டத்தை நிறைவேற்ற இருப்போம் என்றும் அவர் கூறினார். 
 
மேலும் என்னுடைய ஆட்சி காலத்திலேயே நீட் தேர்வுக்கு விலக்கு பெற வேண்டும் என்பதுதான் எனது லட்சியம் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்