பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படுமா? முதலமைச்சர் முக்கிய அறிவிப்பு

Mahendran

வெள்ளி, 5 ஜனவரி 2024 (12:28 IST)
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு ரூ.1000  குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகாததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் எடப்பாடி பழனிச்சாமி, டாக்டர் ராமதாஸ் உட்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பொங்கல் பரிசு தொகை ரூ.1000  வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்குவது குறித்த முடிவை விரைவில் முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று தமிழக அமைச்சர்கள் கூறிவந்த நிலையில் சற்றுமுன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இது குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி பரிசு தொகுப்புடன் ரூ.1000  வழங்கப்படும் என்றும் இந்த ரூ.1000 ரொக்க தொகை பொங்கலுக்கு முன்பே வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்