முதன் முதலாக அப்பல்லோ பயன்படுத்திய அந்த வார்த்தை: ஜெயலலிதா கவலைக்கிடம்!

திங்கள், 5 டிசம்பர் 2016 (13:40 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று அவரது உடல் நிலையில் சிறிது பின்னடைவு ஏற்பட்டது.


 
 
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக அப்பல்லோ தனது அறிக்கையில் அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது பெரும் சந்தேகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
 
முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே மிகவும் மென்மையான வார்த்தைகளையே கூறிவந்தது அப்பல்லோ நிர்வாகம். அவருக்கு சாதாரண காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு தான் என கூறி வந்தது.


 
 
தொடர்ந்து முனேற்றம், தொடர்ந்து முன்னேற்றம், இன்னும் சில தினங்களில் வீடு திரும்புவார், அவர் பூரண குணமடைந்து விட்டார், அவர் எப்போது வீடு திரும்புவார் என்பதை அவரே முடிவே செய்வார் என தொடர்ந்து சாதகமாகவே கூறிவந்தது அப்பல்லோ.
 
இந்நிலையில் நேற்று மாலை முதல்வருக்கு மாரடைப்பு ஏற்பட அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வரும் அப்பல்லோ மருத்துவமனை முதன் முறையாக தனது அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கிறார் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளது மிகவும் உன்னிப்பாக பார்க்கப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதா மீண்டு வந்து தமிழக மக்களுக்காக பணியாற்ற இறைவனை பிராத்திப்போம்.

வெப்துனியாவைப் படிக்கவும்