தமிழக சட்டசபையில் நேற்று பள்ளிக் கல்வி, உயர் கல்வி, விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கை மர்றும் இளைஞர் நலன் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசுவின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் அவ்வப்போது குறுக்கிட்டு பதிலளித்தனர்.
ஒரு விஷயத்தை கூறும் பொழுது, அதை சொல்லிவிட்டு, இதற்கு அமைச்சர்கள் பதிலளிப்பாரா? இதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா? என கேள்வியுடன் முடிக்கிறீர்கள். இதனால் உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர்கள் எழுந்து நின்று பதில் சொல்கின்றனர்.