மக்களவைத் தேர்தல் நாடுமுழுவதும் வரும் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில், அனைத்து தொகுதிக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18 -ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மதுரை மட்டுமல்லாமல், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவங்கை என் சுற்றியுள்ள எல்லா மாவட்டங்களிலும் சித்திரை திருவிழாவும், அழகர் ஆற்றில் இறங்கும் வைபமும் நடைபெறும் எனவே தென் மாவட்ட மக்கள் தேர்தல் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் எனகோரிக்கை விடுத்துள்ளனர்.