இந்த விளம்பரத்தை கண்டு பலர் அந்நிறுவன கணக்கிற்கு பணம் அனுப்பிய நிலையில், இது மோசடி போல தெரிவதால் இதுகுறித்து விளக்கமளிக்க நிறுவனர் நேரில் ஆஜராக போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர், அதன் பேரில் அந்த நிறுவனத்தை நடத்திய சிவம் நரேந்திரன் நேரில் ஆஜராகியுள்ளார்.
விசாரணையில் எந்த உரிமமும் இன்றி நரேந்திரன் அந்த நிறுவனத்தை நடத்தி வந்ததும், வங்கியில் பணம் அனுப்பியவர்களுக்கு முறையான ரசீது வழங்காததும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து பணத்தை மீண்டும் வாடிக்கையாளர் கணக்குகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்த போலீஸார், அனுமதி பெறாத அந்த நிறுவனத்தையும் முடக்கியுள்ளனர்.