சென்னை புறநகரில் தீம் பார்க்.. 100 ஏக்கர் பரப்பளவில் அமைக்க சுற்றுலாத்துறை முடிவு;

செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (15:47 IST)
சென்னை புறநகரில் 100 ஏக்கர் பரப்பளவில் தீம் பார்க் அமைக்க தமிழ்நாடு சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இதுவரை சென்னை உள்பட பல நகரங்களில் தனியார் மட்டுமே தீம் பார்க் அமைத்துள்ள நிலையில் தற்போது தமிழ்நாடு சுற்றுலா துறையே தீம் பார்க் அமைக்க திட்டமிட்டுள்ளது. 
 
சென்னை புறநகரில் 100 ஏக்கர் பரப்பளவில் தீம் பார்க் அமைக்கப்படும் என்றும் தனியார் பங்களிப்புடன் 5 ஆண்டுகளில் இந்த தீம் பார்க் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  
 
அமெரிக்காவில் உள்ள டிஸ்னி தீம் பார்க் மற்றும் யுனிவர்சல் ஸ்டூடியோ போல் சென்னையில் பிரமாண்டமாக இந்த தீம் பார்க் அமையும் என்றும் உலக தரத்துடன் அமைய உள்ள இந்த தீம் பார்க் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்