அடையாறு மெட்ரோ.. சுரங்கம் தோண்டும் பணி தீவிரம்!

திங்கள், 5 டிசம்பர் 2022 (11:45 IST)
சென்னை அடையாறு பகுதியில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட இருக்கும் நிலையில் அங்கு சுரங்கம் தோண்டும் பணி விரைவில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
சென்னை அடையாறு ஆற்றில் 40 மீட்டர் ஆழத்தில் சுரங்க பாதை அமைக்க திட்டமிட்டுள்ள நிலையில் அந்த பகுதியில் சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் அங்கு வரவழைக்கப்பட்டு உள்ளன. 
 
இந்த எந்திரங்களை இணைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் சுரங்கம் தோண்டும் பணி தொடங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
 
சென்னை மெட்ரோவில் புதிதாக மூன்று வழிப்பாதைகள் புதியதாக அமைக்கப்பட்டுள்ளன. ஒன்று கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை, இரண்டாவது மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை மூன்றாவது மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை என மூன்று பாதைகளில் மெட்ரோ அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்