நாளை முதல் சென்னை மெட்ரோ ரயில் இயக்கப்படுவது எப்படி ? மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

வெள்ளி, 12 நவம்பர் 2021 (18:59 IST)
நாளை முதல் சென்னை மெட்ரோ ரயில் வழக்கமான அட்டவணையின்படி இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது
 
கடந்த சில நாட்களாக கன மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அதிகாலை ஐந்தரை மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது நிலைமை சீராகி வருவதையடுத்து சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
நாளை முதல் வார நாட்களில் காலை ஐந்தரை மணி முதல் 11 மணி வரையிலும் ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்