இன்று முதல் சென்னை மெட்ரோ ரயில் கட்டணக்குறைப்பு: பயணிகள் மகிழ்ச்சி!

திங்கள், 22 பிப்ரவரி 2021 (07:12 IST)
சென்னை மக்கள் மிகவும் விருப்பத்துடன் அதிகம் பயன்படுத்தி வருவதுமான சென்னை மெட்ரோ ரயிலின் பயண கட்டணம் இன்று முதல் குறைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
இதுகுறித்து சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட போது சென்னை மெட்ரோ ரயிலின் பயண கட்டணம் குறைக்கப்படும் இந்த கட்டண குறைப்பு பிப்ரவரி 22 முதல் அமலுக்கு வரும் என்றும் கூறியிருந்தார் 
 
அதன்படி இன்று முதல் சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் கட்டணம் குறைக்கப்படுகிறது இதுவரை அதிகபட்சமாக ரூபாய் 70 என்று இருந்த பயண கட்டணம் டோக்கன் முறையில் வாங்கினால் 50 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது என்பதும் பயண அட்டை மூலம் டிக்கெட் வாங்குபவர்களுக்கு 10 சதவீதமும் க்யூஆர் கோட் மூலம் டிக்கெட் வருபவர்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சென்னை மெட்ரோ ரயிலில் புதிய கட்டண விவரங்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு: 
 
0-2 கி.மீ. வரை கட்டணம்‌ ரூ.10 மாற்றமில்லை
2- 4 கி.மீ. வரை கட்டணம்‌ ரூ.20
 2-5 கி.மீ. வரை கட்டணம்‌ ரூ.20
4- 6 கி.மீ. வரை கட்டணம்‌ ரூ.30
5-12 கி.மீ. வரை கட்டணம்‌ ரூ.30
6 -12 கி.மீ. வரை கட்டணம்‌ ரூ.40
12 - 18 கி.மீ. வரை கட்டணம்‌ ரூ.50
12-21 கி.மீ. வரை கட்டணம்‌ ரூ.40
18 - 24 கி.மீ. வரை கட்டணம்‌ ரூ.60
21 - 32 கி.மீ. வரை கட்டணம்‌ ரூ.50
24 கி.மீ. மேல்‌ கட்டணம்‌ ரூ.70
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்