தமிழகத்தில் ஒமிக்ரான் XBB,BA2 வகை வைரஸ்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..!

செவ்வாய், 21 மார்ச் 2023 (14:00 IST)
தமிழகத்தில் ஒமிக்ரான் XBB,BA2 ஆகிய வகை வைரஸ்கள் பரவி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக புதிய வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் இது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்ரமணியன் அவர்கள் தமிழகத்தில் XBB,BA2 ஆகிய வகை வைரஸ் பரவி வருகிறது என்று தெரிவித்தார்.
 
மேலும் ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது 70க்கும் மேல் அதிகரித்து உள்ளது இன்றும் பொதுமக்கள் மாஸ்க் அணிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார். 
 
தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்