சென்னைக்கு 92% அதிக மழை; அக்டோபர் வரை காத்திருக்கு அதீத மழை...

சனி, 28 செப்டம்பர் 2019 (09:33 IST)
செப்டம்பர் மாதத்தில் மட்டும் 53% கூடுதல் மழை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வளிமண்டல் மேலடுக்கு சுழற்சியின் நகர்வு காரணமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழை குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளது பின்வருமாறு, 
 
அக்டோபர் மாதம் முதல் இரண்டு வாரங்களுக்கு தென்மேற்கு பருவ மழை தொடர வாய்ப்புள்ளது. அதன் பின்னர் வடகிழக்கு பருவமழை துவங்கும். கடந்த ஜூன் முதல் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பைவிட 16% அதிக மழை பதிவாகியுள்ளது. 
 
குறிப்பாக செப்டம்பர் மாதத்தில் மட்டும் வழக்கத்தை விட 53% அதிகம் மழை பதிவாகியுள்ளது. அதுவும் செப்டம்பர் மாதத்தில் சென்னையில் வழக்கத்தைவிட 92% அதிக மழை பெய்துள்ளது என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்