மேலு, ராம்குமார் உடலை பரிசோதனை செய்யும்போது தங்களது தரப்பு மருத்துவரும் உடனிருக்க வேண்டுமென ராம்குமாரின் தந்தை பரமசிவத்தின் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதனை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. மனுதாரரின் கோரிக்கைக்கு அரசுத் தரப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. இதனை அனுமதித்தால், எல்லோரும் இதே போல கோரிக்கை விடுக்கக்கூடும் என அரசுத் தரப்பு கூறியது. இதனால், மனு மீது முடிவெடுப்பதில் இரு நீதிபதிகளுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வழக்கை மாற்ற வேண்டுமென நீதிபதிகள் கூறினர்.
அதன்படி, அந்த வழக்கு விசாரணை நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருபாகரன், ராம்குமார் தந்தை தரப்பு கோரிக்கையை நிராகரித்தார்.
இந்நிலையில் பரமசிவனின் வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். அதனால், ராம்குமர் உடல் பிரேத பரிசோதனையின்போது எய்ம்ஸ் மருத்துவர் ஒருவரை நியமிக்கலாம் என்ற உத்தரவை நிறுத்தி வைக்கவேண்டும் என்று நீதிபதி கிருபாகரணிரம் கோரிக்கை விடுத்தார். மேலும் ராம்குமார் உடலை 30-ந் தேதி வரை பதப்படுத்த ராயப்பேட்டை அரசு மருத்துவமனை டீனுக்கு உத்தரவிடவேண்டும்' என்றார். இதையடுத்து நீதிபதி என்.கிருபாகரன், 'டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் பல உண்மைகளை வெளியில் கொண்டு வந்தவர்கள். இப்போது இறந்தவர் (ராம்குமாரின்) உடலின் கண்ணியத்தை காக்கவேண்டும். எனவே வரும் 30ம் தேதி வரை ராம்குமார் உடலை பதப்படுத்தி பாதுகாக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.