சென்னை உள்ளிட்ட பெருநகரங்களின் போக்குவரத்து நெரிசல் ஒரு பக்கம் இருக்க, பொதுமக்களுக்கு இடையூறாக பொதுவெளியில் பைக் ரேஸ் நடத்துபவர்களின் தொல்லையும் அதிகரித்துள்ளது. இரவு, பகல் பாராமல் இவர்கள் நடத்தும் ரேஸ் விளையாட்டு பல சமயங்களில் விபத்து உள்ளிட்ட ஆபத்துகளையும் ஏற்படுத்துகிறது.
சமீபத்தில் சென்னையில் ரேஸ் செல்ல முயன்ற பைக் ரேஸர்களை போலீஸார் கைது செய்திருந்தனர். அவர்கள் மீதான ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வார்டு பாய்க்கு உதவியாளராக ஒரு மாதம் பணி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையோடு ஜாமீன் வழங்கியுள்ளது. நீதிமன்றத்தின் நூதனமான இந்த தீர்ப்பை பலரும் வரவேற்றுள்ளார்கள்.