சென்னை ரிப்பன் மாளிகையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான சட்டமன்ற தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி பிரகாஷ் , மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் நடைபெற்றது.
அதிமுக , திமுக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர் ஆலோசனைக் கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த பிரகாஷ், " 2 முக்கிய காரணங்களுக்காக இன்று கூட்டம் நடைபெற்றது. அங்கீகரிக்ப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் , காவல் ஆணையர் , மாநகராட்சி இணை ஆணையர்கள் இதில் பங்கேற்றனர்.
பதற்றமான வாக்குசாவடிகளின் எண்ணிக்கை குறித்து காவல் ஆணையரிடம் கலந்துரையாடல் நடந்தது.தேர்தல் ஆணையம் , உச்ச நீதிமன்ற ஆணைப்படி பதற்றமான சாவடிகளை கையாளுவது குறித்து ஆலோசனை நடந்தது. சென்னை மாவட்டத்தின் 16 தொகுதிகளின் தேர்தல் அலுவலர்கள் , நுண் பார்வையாளர்கள் இன்று ஆலோசனையில் ஈடுபட்டனர்.
சென்னையில் மொத்தமுள்ள 7,300 தபால் வாக்கில் 1182 வயது முதிர்ந்தோர் வாக்குகள் நேற்றுவரை பதிவு மேலும் மாற்றுத்திறனாளிகள் வாக்கும் பெறப்பட்டுள்ளன. வாகன சோதனைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். போக்குவரத்துக்கும் , இயல்பு வாழ்க்கைக்கும் முடிந்தளவு பாதிப்பின்றி வாகன சோதனைகளை நடத்த முடிவு.