7 மடங்கு விரிவடைந்து பெரு நகரமாக மாறும் சென்னை...

செவ்வாய், 4 ஜூலை 2017 (17:37 IST)
காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் அரக்கோணம் ஆகிய பகுதிகள் சென்னையோடு இணைக்கப்பட்டு 8,878 சதுர கிலோ மீட்டர் கொண்ட ஒரு பெரு நகரமாக உருவெடுக்க இருக்கிறது. 


 

 
சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே, சென்னை மாநகரின் வளர்ச்சியை சமநிலைப்படுத்தவும், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்பை உருவாக்கவும் பெருநகர குழுமம் கடந்த 2008ம் ஆண்டு மிகப்பெரிய திட்டத்தை தீட்டியது.
 
அதன்படி, சென்னை மாநகரம் பெருநகர வளர்ச்சி குழுமம் ஆக மாற்றப்படவுள்ளது. அதன் படி, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களும் சென்னையுடன் இணைக்கப்படவுள்ளது. அதோடு வேலூர் மாவட்டத்தில் இணைந்துள்ள அரக்கோணமும் சென்னையோடு சேர்க்கப்படுகிறது.
 
இதனால், 1189 சதுர கிலோ மீட்டர் உள்ள சென்னை, 8.878 சதுர கிலோ மீட்டராக விரைவடைய இருக்கிறது. அதாவது தற்போது இருப்பது போல் 7 மடங்காக சென்னை விரிவடைய போகிறது. இந்த திட்டம் 2011ம் ஆண்டே பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், தற்போதுதான் இந்த திட்டம் நிறைவேற்றப்பட இருப்பதாக அமைச்சர் ராதாகிருஷ்ணன் நேற்று சட்டசபையில் அறிவித்துள்ளார்.
 
ஐதராபாத் 7,100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், பெங்களூர் 8,005 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் கொண்டவை. தற்போது சென்னை அந்த நகரங்களை மிஞ்சும் வகையில் 8,878 சதர கிலோ மீட்டர் விரிவடைந்து பெரு நகரமாக மாற உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்