தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டது. மீண்டும் இயங்கியது சென்னை மெட்ரோ ரயில்..!

Mahendran

புதன், 15 மே 2024 (15:23 IST)
சென்னை மெட்ரோ ரயில் சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்ட்ரல் - விமான நிலையத்திற்கு இடையிலான சேவை நிறுத்தப்பட நிலையில் தற்போது பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததை அடுத்து மீண்டும் வழக்கமான சேவை தொடங்கியது என்று சென்னை மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து தேனாம்பேட்டை வழியாக விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் இன்று காலை முதல் நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக ஆலந்தூரில் இறங்கி நீல நிற வழிதடத்தில் மாறவேண்டிய சூழல் பயணிகளுக்கு இருந்தது. 
 
இந்த நிலையில் சற்றுமுன் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதாகவும் மீண்டும் சென்ட்ரல் - விமான நிலைய நேரடி மெட்ரோ சேவை தொடங்கியதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளது. 
 
இதனால் மெட்ரோ ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை தேனாம்பேட்டை வழியாக மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்